உலகின் மிகப்பெரிய பேனாவை உருவாக்கிய இந்தியர்.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆச்சாரியா மகுனுரி சீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அந்தப் பேனாவின் மொத்த எடை 37.23 கிலோ ஆகும். மேலும் 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிகப்பெரிய பேனாவின் சாதனையை இந்த பேனா முறியடித்துள்ளது. இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் விதிமுறைகளின்படி இந்த பேனாவின் முனையிலிருந்து, எழுதும்போது மை வெளியே வருகிறது. என அதன் செயல்பாடு பற்றியும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோவில் சீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து அந்த பேனாவை பயன்படுத்தி எழுதி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World largest pen produced indian


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->