உலக அளவில் இணையதள முடக்கம் : இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலக அளவில் இணையதள முடக்கம் குறித்து எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 418 முறை இணைய சேவைகள் முடங்கியுள்ளது. 

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் 96 முறையும், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 30 முறையும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 முறையும், தெலுங்கானா மாநிலத்தில் 3 முறையும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் இந்தியாவில் 84 முறையும், உக்ரைன் நாட்டில் 22 முறையும், ஈரான் நாட்டில் 18 முறையும், மியான்மர் நாட்டில் 7 முறையும் இணைய சேவை முடங்கியுள்ளது.

அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக இணைய சேவைகள் முடக்கத்தில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உலக அளவில் இணைய சேவை நிறுத்தங்களில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world internet blocked service india first place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->