மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை பெண் ஊழியர்களுக்கு விடுமுறை - மாநில அரசு அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை தெலுங்கானாவில் உள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்தி குமாரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அதில் நாளை மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடன் உதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens day holiday in Telungana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->