அதிரடி காட்டிய அமலாக்கத்துறை - மேற்குவங்க அமைச்சர் கைது.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதன் படி மாநிலத்தின் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் இருந்து வருகிறார். 

இவர் இதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு சொந்தமான இரண்டு வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. 

இதையடுத்து அமலாக்கத்துறை இன்று அதிகாலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal minister jothpriya mallik arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->