இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது! விக்ரம் லேண்டரில் சில மாற்றம் கொண்டுவர இஸ்ரோ முடிவு!! - Seithipunal
Seithipunal


சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி தரை இறங்கிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது, இது விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் தொலைவில் லேண்டர் விழுந்து கிடந்தது. இதனை ஆர்பிட்டர் படம் பிடித்து உறுதி செய்தது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம்.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் இவற்றின் ஆயுள் 14 நாட்கள். ஏற்கனவே 4 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த 10 நாட்களில் விக்ரம் லேண்டருக்கு உயிர் கொடுத்து தகவல் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

தகவல் தொடர்பினை மீட்டெடுக்கிற வகையில் விக்ரம் லேண்டரின் ஆன்டெனாக்களை மாற்றி அமைக்க முடியுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram lander antenna try to change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->