உத்தரகாண்டில் கடும் மழையினால் நிலச்சரிவு! 10 பேர் மாயம்! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. 

பக்தர்கள் இந்த கோயிலுக்கு மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கோயிலுக்கு சாலை வழியாக செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். 

நேற்று இரவு கவுரிகண்ட் பகுதியில் கனமழை பெய்ததால், அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை போன்றவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. 

தற்போது வரை 3 பேரின் சடலங்கள் இடிபாடுகளில் கிடைத்துள்ளன. இது தொடர்பாக ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர் விசாகா தெரிவிக்கையில், "காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளனர். 

கன மழையினால், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினால் மீட்பு நடவடிக்கை மிக கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttrakhand heavy rains due to Landslide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->