எதிர்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புள்ளது - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய செயற்குழுவின் நான்கு நாள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்ததாவது, 

"மத மாற்றம் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்தல் போன்றவை "மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை" ஏற்படுத்தும். மத அடிப்படையிலான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு பல நாடுகளின் பிளவுக்கு வழிவகுத்துள்ளது.

இதையடுத்து மத மாற்றத்தைத் தடுப்பதில் தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். கடந்த 40-50 ஆண்டுகளில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, ஒரு குடும்பத்தின் சராசரி அளவு 3.4ல் இருந்து 1.9 உறுப்பினர்களாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் இளைஞர்களுடன் ஒப்பிடும் போது முதியோர்களின் எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்புள்ளது. அது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttarpradesh rss four day meeting General Secretary Dattatreya Hosabale press meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->