உத்தரகண்டில் மோசமான சாதனை புரிந்த முதல்வர் வேட்பாளர்கள்.! வியப்பூட்டும் முடிவுகள்.!  - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி என்று அனைத்து கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர். 

இன்று பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சியின் முதல்வர் வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தனது கதிமா தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம்  தோல்வி அடைந்துள்ளார்.

அதுபோல, லால்குவான் தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் சிங்கிடம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹரிஷ் ராவத் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

மேலும், கங்கோத்ரி தொகுதியில் பாஜக வேட்பாளரான சுரேஷ் சந்திர சௌஹானிடம் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அஜய் கோதியால் 28,667 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttarakhant cm candidates all are failed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->