நிதிஷ்குமார் கட்சியிலிருந்து வெளியேறி உபேந்திர குஷ்வாஹா புதிய கட்சி தொடங்கினார்..!! - Seithipunal
Seithipunal


பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா  கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். அதன் பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் அக்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை பிகாரின் வருங்கால தலைவர் என்றும், வருங்கால முதல்வர் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தேஜஸ்வி யாதவ் பிகார் முதல்வரானால் மாநிலத்தில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிடும் எனவும் லாலு பிரசாத் யாதவ் எவ்வாறு பிஹார் மாநிலத்தை அழித்தாரோ அதேபோன்று தேஜஸ்வி யாதவ் அழித்துவிடுவார் என்றும் குஷ்வாஹா விமர்சித்தார்.

மேலும் அதிருப்தியில் இருந்த உபேந்திர குஷ்வாஹா நிதிஷ் குமாரை விமர்சிக்கத் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக இந்த விமர்சனப் போக்கு நீடித்து வந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு விலகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்

மேலும் ராஷ்ட்ரிய லோக் ஜனதா தள் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.  அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக தான் இருக்கப் போவதாகவும் என அறிவித்துள்ளது பிஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Upendra Kushwaha started a new party


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->