தலை துண்டித்த நிலையில் கிடந்த 2 சகோதரிகள்! அக்காவின் வாக்குமூலத்தால் பதறிப்போன பெற்றோர்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், பகதூர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். இவர் விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். 

ஜெய்வீர் நேற்று முன்தினம் 3 மகள்களையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் வயலுக்குச் சென்று விட்டார். 

அவர்கள் மீண்டும் இரவு வீடு திரும்பிய போது வீட்டில் அவரது மகள்கள் சுர்பி (வயது 6),ரோகினி (வயது 4) ஆகிய 2 மகள்களும் ரத்த வெள்ளத்தில் தனித்தனி அறைகளில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 2 சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் போலீசார் சகோதரிகளின் இந்த கொலை வழக்கில் மூத்த சகோதரியான அஞ்சலி மேல் சந்தேகமடைந்து போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அஞ்சலி 2 சகோதரிகளையும் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசார் அஞ்சலி மீது வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். 

இருப்பினும் காரணம் தெரியவில்லை. இந்த கொலையில் அஞ்சலி அவரது 3 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செய்திருப்பது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் 3 ஆண் நண்பர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கிடைத்தால் தான் இரட்டை கொலைகான காரணம் தெரிய வரும் என்றனர்.

மேலும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அரிவாள், ரத்தம் படிந்த ஆடைகள் போன்றவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூத்த சகோதரி தனது 2 சகோதரிகளை தலை துண்டித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP two sisters murder case girl arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->