நிர்மலா சீதாராமன் வருகைக்கு தயாராகும் புதுச்சேரி.!! பலே திட்டத்துடன் முதல்வர் ரங்கசாமி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில துணைநிலை ஆளுநராக முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இருந்து வருகிறார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடுத்த வாரம் புதுவைக்கு வருகை தரவுள்ளார். இதன் காரணமாக புதுவையில் அரசு துறைகள் அனைத்தும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன. 

புதுச்சேரியில் ஏற்கனவே முடிந்துள்ள திட்டங்கள், துறை ரீதியாக புதிய திட்டங்கள், மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் பட்டியலை தயாரித்து ஆய்வு கூட்டங்கள் நடத்த எற்பாடு செய்துள்ளது. 

புதுவை மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்து முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி, நிதி பற்றாக்குறை குறித்த அறிக்கையை தயார் செய்து புதுவையை நிதிக்குழுவில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், சிறப்பு நிதியுதவி திட்டத்தில் ரூ.2,328 கோடி புதுவைக்காக ஒதுக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister Nirmala Sitharaman visiting puducherry


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->