மணிப்பூரில் தொடரும் பதற்றம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் தொடரும் பதற்றம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.!

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த 4 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறபோதும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. 

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் தெங்னெவ்பால் மாவட்டம்பல்லேல் நகரில் நேற்று காலை இரு கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் துப்பாக்கி சண்டை குறித்த தகவல் கிடைத்ததும் அண்டை மாவட்டங்களான தவுபால் மற்றும் காக்சிங்கில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல்லேல் நகரை நோக்கி விரைந்து சென்றனர்.

அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுமார் 50 பெண்கள் காயம் அடைந்தனர். 

இந்தச் சம்பவம் நடவுபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், பல்லேல் நகரில் இரு தரப்பு கும்பல்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. அந்த சண்டையில், 48 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இரண்டு பேர் பலியான சம்பவத்தால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for gun shoot in manipur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->