மருத்துவ சீட் வாங்கி தருவதாக பண மோசடி -  2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நொய்டாவில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தீபேந்திரா மற்றும் ராஜேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நொய்டா பகுதியில் மட்டும் இயங்கி வந்த இவர்கள் காலப்போக்கில் லக்னோ, கான்பூர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் பரந்த நெட்வொர்க்கை கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் லக்னோவைச் சேர்ந்த தர்ஷிகா சிங் என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து நொய்டா காவல்துறை துணை ஆணையர் ஹரிஷ் சந்தர் தெரிவித்ததாவது, "இந்தக் கும்பல் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, குறிவைத்து மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர். 

மேலும், அவர்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து சொந்த மாநிலத்தில் சேர்க்கைக்கு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாகவும், பிற மாநிலங்களில் சேர்க்கைக்கு ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகவும் பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர். இந்த கும்பலின் முக்கிய தூண்டுகோளான யாஷ் சதுர்வேதி என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arretsed for money fraud to medical seat buy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->