கேபிள் டிவி ஆப்ரேட்டருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த டிராய்.!! - Seithipunal
Seithipunal


கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையானமானது மாதத்திற்கு ரூ.153 கட்டணத்துடன் 200 கும் அதிமான இலவச சேனல்களை வாடிக்கையாளருக்கு கட்டாயம் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

ரூ.153 க்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வழங்கி வரும் நிலையில்., தற்போது வெளியாகும் உத்தரவிற்கு பின்னர் 200 சேனல்கள் வழங்க வேண்டும். 

இது குறித்த கட்டாய உத்தரவானது மார்ச் 1 ஆம் தேதி முதலாகவே நடைமுறைக்கு வரும் நிலையில்., டிராய் அமைப்புடைய உத்தரவின் காரணமாக சன் டிவி நெட்ஒர்க் 6.37 விழுக்காடு அளவு சரிந்துள்ளதாகவும்., டென் நெட்ஒர்க் பங்குகள் 3.90 விழுக்காடு அளவும்., ஜீ என்டர்டைமென்ட் பங்குகள் 2.99 விழுக்காடு அளவும் சார்ந்துள்ளது. 

டிஷ் டிவி துவக்கத்தில் வர்த்தக பங்கு சரிவை நோக்கி சென்ற நிலையில்., மீண்டும் நிலைமை சரியானது. மேலும்., அதிகபட்சமாக இலவச சேனல்களுக்கு ரூ.160 கட்டணம் போதுமானது என்றும்., கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் சேனல்களை காண இயலும். 

இது தொடர்பாக டிராய் அறிவித்துள்ள உத்தரவில்., பங்குதாரர்களின் நலன் மற்றும் வாடிக்கையாளரின் நலனை பாதுகாக்கவும்., பல தொலைக்காட்சியுடைய இணைப்பு ஒரே நபரின் பெயரில் இருந்தால் அறிவிக்கப்பட்ட கட்டத்தில் இருந்து 40 விழுக்காடு கூடுதல் தொகை வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது இதற்கு முன்னதாக இலவச சேனல்கள் எதனை வழங்குகிறோம் என்பதை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க அவசியமில்லை என்றும்., இனி எவ்வுளவு எண்ணிக்கையிலான சேனல்கள் ஒளிபரப்பாகிறது என்பதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv channel 200 nos free telecast announcement by troy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->