தக்காளி விற்று ரூ.30 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயியை போட்டு தள்ளிய மர்மகும்பல்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் மதனபள்ளி அருகே ஐந்து ஏக்கரில் தக்காளி பயிரிட்டு கடந்த 20 நாட்களில் ரூ.30 லட்சத்திற்கு தக்காளி விற்ற விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி அடுத்த போடிமல்லாடினா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் ரெட்டி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் ராஜசேகர் ரெட்டி 5 ஏக்கரில் பயிரிட்ட தக்காளியை விற்று சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமாக லாபத்தை ஈட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மதனப்பள்ளி புறநகர் பகுதியில் வந்தபோது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ராஜசேகர் ரெட்டியை கை கால்கள் கட்டிய நிலையில் தலையில் கல்லை போட்டு கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு விவசாய செய்ய சென்ற கூலி தொழிலாளிகள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களையும், ஆதாரங்களையும் சேகரித்தனர்.

அப்போது ராஜசேகர் ரெட்டியிடமிருந்து 30 லட்சம் ரூபாய்க்கான ரசீது கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவரிடம் பணம் இருப்பதை தெரிந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato farming massacre murdered in Andra Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->