ஸ்டாலின் அழைக்கிறேன் - வைரலாகும் ஸ்டாலினின் குரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. 

அந்த வகையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த நிலையில், இன்று மாலை திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இதற்கு முன்னதாக, திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, ’ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ அரசியலில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் வகையில் ’இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் – ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை திமுக ஐடி விங் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm stalin new vedio released for election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->