திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 தரிசன டிக்கெட்டு இன்று வெளியீடு...! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்பொழுது கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனை பக்தர்கள், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Rs 300 darshan tickets for July and August will be released today may 24


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->