திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை - ஒரு மணி நேரத்தில் இவ்வளவு கோடி வசூலா.? - Seithipunal
Seithipunal


உலக பிரசித்தி பெற்ற மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுகிறார்கள். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 நுழைவு கட்டண டிக்கெட் நேற்று ஆன்லைனில் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இதனை பக்தர்கள் https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமும், TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன. இதில் சுமார் ஒரு மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி, ரூபாய் 19 கோடியே 35 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Rs 300 darshan ticket sold for Rs 19 crore 35 lakhs in one hour


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->