ரயிலில் பயணிகளைத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர் - அதிரடி உத்தரவிட்ட ரெயில்வே போலீசார்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா மற்றும் பராபங்கி ரயில் நிலையங்களுக்கு இடையே பரவுனி-லக்னோ விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரகாஷ் என்பவர் பயணசீட்டு பரிசோதராக அந்த ரயிலில் பணியில் இருந்தார். 

அந்த நேரத்தில் ரயிலில் பயணித்த சில இளைஞர்கள் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்துள்ளனர். அவர்களை டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவத்தை அந்த பெட்டியில் பயணம் செய்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களையும் பிரகாஷ் அடிப்பதற்காக கையை ஓங்கியுள்ளார். 

இந்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இருப்பினும், பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, பிரகாஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ticket examinor attack passanger in train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->