உச்சநீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு வழக்குகள் விசாரணை.! - Seithipunal
Seithipunal


இன்று உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்கிறது. உச்சநீதிமன்ற வரலாற்றில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்வது இதுவே மூன்றாவது முறையாகும். 

நேற்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி உள்ளிட்ட பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, அமைத்தார். அதன் படி, இன்று இந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

இதற்கு முன்பு கடந்த 2013 மற்றும் 2018ல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. உச்சநீதிமன்றத்திற்கு முப்பத்து நான்கு நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது இருபத்தேழு நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில், தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். அவர்களில், நீதிபதி பி.வி. நாகரத்னா 2027 ஆம் ஆண்டு, 'நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி' என்ற பெருமையை அடைவார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

third time woman judges investigation in supreme court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->