நக்சலைட் ஊடுருவாலால் தமிழக - கேரள எல்லையில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கம்பமலை எஸ்டேட்டில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் தொழிலாளர்கள் சுமார் 110க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கேரளா அரசுக்கு சொந்தமான அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு நக்சல் கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனை அடுத்து அந்த அலுவலகத்திற்கு காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

இந்த நிலையில் மீண்டும் நக்சல் தலைவர் மெய்தீன் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் அதே அலுவலகத்தை தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதோடு பொருட்களையும் சூறையாடியுள்ளனர். 

இதன் காரணமாக தமிழக கேரள எல்லை சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு வாகன தணிக்கையை தீவிர படுத்தியுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக கேரள எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension on TamilNadu Kerala border due to Naxalite infiltration!


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->