பள்ளி மாணவனுடன் போட்டோஷூட் - தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களோடு பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதாவும் சென்றுள்ளார். அங்கு அவர், சுற்றுலா வந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவனோடு புகைப்படம் எடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அதில் மாணவனும், ஆசிரியையும் முத்தமிடுவது போலவும், ஆசிரியை புஷ்பலதாவை மாணவன் தூக்கிவைத்திருப்பது போலவும் இருந்துள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்து போன பொதுமக்கள் இந்த புகைப்படங்கள் மிகவும் நெருக்கமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் கல்வி அதிகாரி உமாதேவியிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கல்வி அதிகாரி உமாதேவி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தலைமை ஆசிரியை புஷ்பலதாவை இடைநீக்கம் செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher suspend for photoshoot with school student in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->