டெலி மனஸ் ஆலோசனை வழங்கியதில் முதலிடம் பிடித்த மாநிலம் - எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


டெலி மனஸ் ஆலோசனை வழங்கியதில் முதலிடம் பிடித்த மாநிலம் - எது தெரியுமா?

கடந்த ஆண்டு உலக மனநல தினத்தன்று தொடங்கப்பட்ட டெலி மனஸ் சேவாவின் மூலம் இதுவரைக்கும் 3,50,000 பேருக்கு மனநலன் ஆலோசனைகள் வழங்கபட்டுள்ளது. தற்போது, 44 டெலி மனஸ் செல்கள் ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், உலக மனநல தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று தேசிய மனநல மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் ஆன்லைன் சந்திப்பில் கலந்துகொண்ட மான்சுக் மண்டோவிய நிம்ஹான்ஸில் புதிய வசதிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், டெலி மனஸ் சேவாவின் புதிய லோகோவையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில், தேசிய தொலை மனநல ஆரோக்கிய திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை எட்டியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நினைவுப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதில், பெரிய மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களை மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பெற்றது. சிறிய மாநிலங்களின் வரிசையில் தெலங்கானா, ஜார்கண்ட் மற்றும் கேரளா உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுகளை பெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu get first place for tele manas councelled


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->