மத்திய அரசிடம் அனுமதிக்கு கேட்டுள்ள தமிழக அரசு! 22% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் நடைபெறுமா? - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??

நடப்பு பருவ ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து 22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக விவசாயிகளிடமிருந்து தமிழக அரசின் நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்கின்றன. இந்த நெல்கள் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 

நடப்பு ஆண்டின் முதல் கொள்முதல் காலம் செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்கியது. இந்த காலகட்டத்தில் 17% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்பொழுது தமிழக முழுவதும் பரவலாக கன மழை பொழிவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவு காணப்படுகிறது. எனவே அதிக ஈரம் பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யுமாறு வாணிப கழகத்திற்கு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு நடப்பு கொள்முதல் ஆண்டில் 22 சதவீதம் வரை இருப்பதன் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத்துறை செயலாளர் தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக தெரிய வருகிறது. இந்த கோரிக்கையை ஏற்று இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை அளவிட்டு அதற்கு ஏற்ற அளவை உயர்த்தி தர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government has asked the central government procurement more much content rice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->