இளைஞர்களின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


சுவாமி விவேகானந்தர் :

இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்" மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்" போன்ற அமைப்புகளையும் நிறுவினார்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!" என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா".

இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் (1902) மறைந்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swami vivekananda birthday 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->