அதானி குழுமம் விவகாரத்தில் செபி அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


அதானி குழுமம் சில ஆண்டுகளாக நிதி முறைகேடில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியீட்ட அறிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனோஜ் திவாரி,  எம்.எல் சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் "ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கும் விளைவித்தலாகவும் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை ஒரு சதி திட்டம் என" குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் சார்பில் எம்.எல் சர்மா ஆஜராகி குறுகிய காலத்திற்குள் அதானி குழும பங்குகள் ரூ.2200ல் இருந்து ரூ600க்கு குறைந்துள்ளதற்கு செபி அமைப்பு தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் செபி அமைப்பு அவ்வாறு தடை செய்யவில்லை. எனவே இதில் உள்நோக்கம் உள்ளது என குற்றம் சாட்டை வாதத்தை முன் வைத்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் செபி அமைப்பு வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட தலைமை நீதிபதி சந்திர சூட் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court orders SEBI answer on Adani Group issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->