மதமாற்றத்தை தடுக்கும் பணியை குடும்பங்களில் இருந்தே தொடங்க வேண்டும் - RSS தலைவர் மோகன்பகவத்.! - Seithipunal
Seithipunal


கோவையில் சிங்காநல்லூர் காமாட்சிபுரி ஆதீனம் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் மழை வேண்டியும், இயற்கை பேரிடர்கள் போன்றவை நிகழாமல் தடுக்கவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், ஓமங்கள் நன்மையை ஏற்படுத்தும். கம்போடியாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது எனது தலையை அங்குள்ள கல்லில் மோதி ரத்தம் வர செய்து வழிபட்டேன். மதமாற்றத்தால் இந்தியா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார வீதியில் இருந்தாலும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது.

உலகின் அனைத்து இடங்களிலும் இந்து கோயில்கள் உள்ளன இதன் மூலம் நமது மதத்தின் சாராம்சம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று கோயில்களை கோயில்களை நிலைநாட்டினார். அதன் மூலம் நம் நாட்டில் பாரம்பரியம் வரலாறு பரவியுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்து தர்மத்தின் சிறப்பு. மதமாற்றம் கூடாது என்பது நம்மிடம் இருந்து தொடங்கப்பட வேண்டும். நாம் நமது குடும்பம் உறவினர்கள் மதமாற்றத்தை தடுக்க வேண்டும் குடும்பங்களில் இருந்து இந்த பணியை தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stop religion change from our family RSS leader mohan bhagwat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->