இலங்கையில் 8 லட்சம் வரை இந்திய ரூபாய்க்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


ஆசிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க டாலரை சார்ந்துள்ளது. இதனைக் குறைப்பதற்காக  ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்துவதற்கு இந்தியா திட்டமிட்டு, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீண்டுவருவதற்கு இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. 

அந்த வகையில், இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது இந்த வேண்டுகோளுக்கு  இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10 ஆயிரம் டாலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இலங்கை மக்கள் இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் 'இந்திய ரூபாய் நாஸ்ட்ரோ கணக்குகள்' தொடங்குவதற்கு இந்திய வங்கியுடன் இலங்கை வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan goverment permission to inidam mony


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->