இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுவர் - பறிபோன மாணவனின் உயிர்.!  - Seithipunal
Seithipunal


இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுவர் - பறிபோன மாணவனின் உயிர்.! 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள, ராமநகரா மாவட்டத்தில் செயல்படும் மொரார்ஜி தேசாய் அரசு போர்டிங் பள்ளியில் சுமார் 240 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள சிமென்ட் குடிநீர் தொட்டிக்கு மாணவர்கள் சிலர் தங்களது தட்டுகளை கழுவுவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது, இந்தக் குடிநீர் தொட்டியின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தங்கள் தட்டுகளைக் கழுவச் சென்ற மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர். இதைப்பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியானாக மூன்று போரையும் மீட்டு சிக்சிகாய்க்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 6-ம் வகுப்பு பயிலும் கௌசிக் கவுடா என்ற மாணவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்துக்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாஜக எம்எல்ஏவான அஸ்வத் நாராயண், “பிஞ்சுக் குழந்தைகள் தங்கிப் பயிலும் பள்ளியின் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாததே இந்த துயரத்துக்கு காரணம். அப்பாவி சிறுவனின் உயிர் பலியாகி இருப்பதற்கு அரசு அதிகாரிகள் உட்பட பொறுப்பான பதவியில் இருக்கும் அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி பேசியுள்ளார்.

இதையடுத்து, அரசு அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் இதர சுவர்களையும் இடிக்க உத்தரவிட்டனர். மேலும் இதர வளாகங்களில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி மற்றும் விடுதிகளின் கட்டிடங்கள் குறித்துதீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixth class student died for govt school roof collapse in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->