உத்தரகாண்டில் ராகிங் கொடுமை.! ஜூனியர் மாணவனை நிர்வாணப்படுத்தி மது அருந்த செய்த சீனியர் மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் தலைநகர் டேராடூனில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ரிஷிகேஷைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். 

இவர் தனியார் விடுதி ஒன்றில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுடன் சேர்ந்து தங்கியநிலையில், அறையில் தங்கியுள்ள சக மாணவன் ஒருவனுடன் சேர்ந்து கல்லூரி சீனியர் மாணவர்கள் இருவர் அந்த மாணவரின் ஆடையைக் கழற்றச் செய்து, நிர்வாணப்படுத்தியதுடன், கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து ராகிங் செய்துள்ளனர். 

மேலும் அந்த மாணவர் மது அருந்துவதை படம்பிடித்து, ரூ.60,000 செலுத்தவில்லை என்றால், வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி, மாணவனை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். 

இதையடுத்து இச்சம்பவம் குறித்து, பிரேம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழக பதிவாளர் மணீஷ் மதன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior students ragging to junior student naked and drink alcohol in uttarakhand


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->