ஊருக்குள் புகுந்த கடல்நீர் - சுனாமியா? அச்சத்தில் கேரள மக்கள்.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முன்தினம் ஒட்டுமொத்த கடலும் திடீரென கொந்தளித்து, பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது. அத்துடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததில் பல வீடுகள் சேதமடைந்தன. 

இதேபோல், பல பகுதிகளில் கடல் பல கிலோமீட்டருக்கு உள்வாங்கியதும் பீதீயை ஏற்படுத்தியது. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில், பனிமலைகள் சூழ்ந்த மனிதர்களே இல்லாத அண்டார்டிகா துருவப் பகுதியில் உள்ள கடல்களில் மிக மிக சக்திவாய்ந்த புயல் ஏற்பட்டிருப்பதாகவும், அந்தத் தாக்கத்தின் காரணமாகவே கேரளாவில் உள்ள கடல்களில் கொந்தளிப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வந்தததாகவும் தெரிவித்தது. 

மேலும், அண்டார்டிகாவில் புயல் அடங்கவில்லை என்பதால் இவ்வாறு கடல் கொந்தளிப்பு தொடரும் என்றும், பல இடங்களில் கடல் நீர் மிக வேகமாக ஊருக்குள் வரும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sea water enter village in kerala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->