#கர்நாடகா:: இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்.. அமல்படுத்த இடைக்கால தடை..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை வருமே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. கர்நாடக மாநில தேர்தல் களத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கர்நாடக மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் மே 9ம் தேதி வரை கர்நாடகா அரசு இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பான எந்த ஒரு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பையும், நியமன ஆணைகளையும் மேற்கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மதிய உணவுத்துறை அமைச்சர் அமித் ஷா மத ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC ordered Muslims reservation canceled not be implement till May9


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->