ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்குக.!! தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் 76வது சுதந்திர தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

சென்னை உயர் நீதிமன்றம் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியும் காவல்துறையினர் சில மாவட்டங்களில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மேலும் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரனுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC directs TNgovt give permission to RSS rally


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->