சபரிமலை ஐயப்பன் கோயில்.. ஆடி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி நடை திறப்பு.! - Seithipunal
Seithipunal


ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் ஜூலை 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

அதனைத் தொடர்ந்து 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இதில் ஜூலை 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 21ஆம் தேதி வரை ஆடி மாத பூஜைகள் நடைபெற்று அன்று மாலை நடை சாத்தப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimalai ayyappan temple open on July 16


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->