விதிகளை மீறிய ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா வங்கிகள் - ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி வகுத்துத் தந்துள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளில் இருந்து சிலவற்றை மீறியதாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ12.19 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ3.95 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளதாவது:- "கடன்கள் மற்றும் முன்பணங்கள் கையாளுகையில் சட்டரீதியான கட்டுப்பாடுகள்" மற்றும் "வணிக வங்கிகள் மூலம் மோசடிகள் வகைப்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல்' தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ’வங்கிகளின் நிதி சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதில் அபாயங்கள் மற்றும் நடத்தை விதிகளை நிர்வகித்தல்’ மற்றும் ’வங்கிகளின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான உத்தரவுகளை மீறியது’ உள்ளிட்டவற்றுக்காக கோடக் மஹிந்திரா வங்கி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reserve bank fined to icici and kotak mahendira bank


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->