தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தீவிரமடையும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிராவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து 4 நாட்களாக மும்பையில் கனமழை மழை பெய்து வருகிறது.

இதனால் மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரும் கனமழையால் முக்கியசாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதனால் ரயில் சேவைகள் மற்றும் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தேரி பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மும்பை, தானே, புனே மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் மும்பை தெற்கு கொங்கன், கோவா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red alert for Maharashtra due to intensifying heavy rains


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->