வெளுத்து வாங்கும் மழை - சபரிமலைக்கு ரெட் அலார்ட்.! - Seithipunal
Seithipunal


குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதற்கிடையே கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட்டும், திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். ஆனால், அங்கு பெய்யும் கனமழை பக்தர்களுக்கு பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறப்பு ரெயில்கள், விமானங்களில் இருமுடி அனுமதி என்று பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி இருப்பது பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alart to kerala pathinam thitta district


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->