எல்லை தாண்டிய பயங்கரவாதம் சர்வதேச சமூகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் - ராஜ்நாத் சிங் - Seithipunal
Seithipunal


ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது.

கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் இவர்களின் அழைப்பினால், இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக கம்போடியா சென்றார். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நாடுகடந்த மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றார். மேலும் அதற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது.

பயங்கரவாத குழுக்கள் பணப்பரிமாற்றத்திற்கும், ஆதரவாளர்களை சேர்ப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்புகளை உருவாக்கியுள்ளது என்றும், சைபர்-குற்றங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சைபர்-தாக்குதல்களாக மாறுவது, மாநில மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக மனிதாபிமான உதவிகள் மற்றும், உணவு தானியங்களை பெரிய அளவு விரிவுப்படுத்துவதில் இந்தியா தனது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh says Cross border terrorism is the biggest threat to the international community


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->