கடைசி நேரத்தில் பா.ஜனதாவிற்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.! காரணம் இதுதான்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளிலும் வருகின்ற 25 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா, அசோக் காலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக திட்டம் தீட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. 

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இருப்பினும் பா.ஜனதா நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. 

இந்நிலையில் கடைசி வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. இதில் உதய்பூரில் உள்ள தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு பத்திரிக்கையாளர் கோபால் சர்மா, தொழிலதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆம் தேதி மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் முன்னாள் மந்திரி மருமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது அவருக்கு பதிலாக அவரது மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருந்த கிரிராஜ் மலிங்கா தற்போது பா.ஜனதா கட்சியில் இணைந்ததால் அவருக்கு பா.ஜனதாவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Congress MLA joined to BJP 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->