வேலை நிறுத்த போராட்டம்: நாள் குறித்த ரயில்வே தொழிற்சங்கங்கள்! - Seithipunal
Seithipunal


அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கடந்த 3 நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நான்காவது நாளாக இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தென் மண்டல தொழிற்சங்க தலைவர் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்த ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது. 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 30 லட்சம் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்த போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ, துணைப் பொதுச் செயலாளர், நிர்வாகிகள், ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway unions Strike issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->