சொந்த தொகுதியிலேயே மண்ணை கவ்வும் ராகுல்.! வாக்கு வித்தியாசத்தால் தலையில் துண்டை போடும் தலைமை.!!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது துவங்கியது. இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை சுமார் 8 மணிக்கு துவங்கியது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்படவுள்ளது. இதற்கு பின்னர் சரியாக 08.30 மணிக்கு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்பட்டது. இந்த தேர்தல் பணியில் தமிழகத்தில் சுமார் 45 மையங்கள் அமைக்கப்பட்டு., 17 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

at current lok shaba election vote counting report

மேலும்., சுமார் 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 36 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லலும் நபர்களுக்கு அதிரடி கட்டுப்பாடானது தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சி 345 இடங்களில் முன்னிலையிலும்., காங்கிரஸ் கட்சி 93 இடங்களிலும்., பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 37 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 2 இடங்களிலும்., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0 இடங்களிலும்., நாம் தமிழர் கட்சி 0 இடங்களிலும்., மக்கள் நீதி மையம் கட்சி 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் திமுக 14 இடங்களிலும்., அதிமுக 08 இடங்களிலும்., அமமுக 0 இடத்தில் முன்னணியில் உள்ளது. புதுச்சேரியை பொறுத்த வரையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் உள்ளார்.

in Gujarat state bjp first vote counting lok shabha election

இந்த நிலையில்., காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அமேலி மற்றும் வயநாடு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டார். அவரின் சொந்த தொகுதி மற்றும் பூர்வீகமாக வெற்றி கண்டு வந்த தொகுதியிலேயே அவரை எதிர்த்து நின்ற வேட்பாளருக்கும் இவருக்கும் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி பின்னிலையில் உள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது சொந்த தொகுதியிலேயே மக்கள் அவரின் மீது அதிருப்தி உள்ளது தெரியவருகிறது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul Gandhi favorite place amethi ragul get vote lower than opposite candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->