புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா ஆகியோர் வாகனத்தில் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது சந்திர பிரியங்காவுக்கு கடும் வெயில் காரணமாக திடீரென சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு சேகரிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

அங்கும் உடல்நிலை மோசமடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெயில் தாக்கத்தால் சந்திர பிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சந்திர பிரியங்கா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Ex woman minister admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->