தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் பாலக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தனியார் பேருந்து ஒன்று அங்குள்ள பிரதான சாலையில் இருபதுக்கு மேற்பட்ட பயணிகளுடன் வேகமாக சென்றது. 

அப்போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் அதிக வேகத்தில் மோதியது. உடனே பேருந்து ஓட்டுநர் அருகில் உள்ள பள்ளத்தில் விழாமல் பேருந்தை சாமார்த்தியமாக செயல்பட்டு மீண்டும் சாலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மரண பீதியில் அவசர அவசரமாக முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். 

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் வெளியான நிலையில் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private bus accident in kerala palakadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->