ஆன்மீகமும், மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது நம் நாடு - பிரதமர் மோடி உரை.! - Seithipunal
Seithipunal



ஹாரியானா மாநிலம், பரிதாபாத்தில் 2,500 படுக்கை வசதிகளுடன், சுமார் ரூ.6000 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

அப்போது பேசிய அவர், "ஆன்மீகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சுகாதாரத் துறை நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை மூலம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம், சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை' நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த புற்றுநோய் மருத்துவமனை 300 படுக்கை வசதிகளும் ரூ.600 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ளது.  மருத்துவமனையானது  கொண்ட ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனையாகும். 

இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி, மெடிக்கல் ஆன்காலஜி - கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சை முறைகளும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Narendra Modi open Amrita Hospital in Paritabad Haryana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->