வானொலி அனைவரின் வாழ்க்கையையும் பிரகாசமாக்கும் - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதம் பதின்மூன்றாம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. அதன் படி, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் பதின்மூன்றாம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 'உலக வானொலி தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி கேட்போர் மற்றும் ஒலிபரப்பு ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "உலக வானொலி தினமான இன்று அனைத்து வானொலி, ரேடியோ ஜாக்கிகள் மற்றும் ஒலிபரப்பு ஊடக அமைப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 

புது புது நிகழ்ச்சிகள் மூலமாகவும், மனிதனின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதன் மூலமாகவும் வானொலி, அனைவரின் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi greets to World Radio Day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->