"நீங்க உண்மையாவே இந்துவா இருந்தா.." தீபிகா படுகோனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஜான் ஆபிரகாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டது.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. தற்போது பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் என்ற பாஜக எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், "உண்மையிலேயே நீங்கள் ஒரு இந்துவாக இருந்தால் பதான் திரைப்படத்தை பார்க்கவும் கூடாது. அந்த படத்தை திரையில் வெளியிடவும் கூடாது. காவி நிறத்தை அவமதிப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pragya Singh against pathan song


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->