கள்ளத் தொடர்பைத் தட்டி கேட்ட மனைவி - ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த தலைமை காவலர்.! - Seithipunal
Seithipunal


கள்ளத் தொடர்பைத் தட்டி கேட்ட மனைவி - ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த தலைமை காவலர்.!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சூரிய பேட்டை மாவட்டம் முனகலு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்-ஷோபா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் பணிபுரிந்த போது 
பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை ஷோபா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷோபாவின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் படி போலீசார் ராஜ்குமாரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் ராஜ்குமாரின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  ஷோபா முதல் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்துள்ளார்.

இதைப்பார்த்த ராஜ்குமார் ஆத்திரத்தில் ஷோபாவை கீழே தள்ளி அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். இதைப்பார்த்த தனது மூத்த மகனையும் ராஜ்குமார் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதனால், காயமடைந்த ராஜ்குமாரின் மகன் ரத்த காயங்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் அளித்துள்ளார். இதைக்கேட்ட உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோபாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷோபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தலைமைக் காவலர் ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer kill wife for ask illegal relation ship in andira


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->