நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக் கூடிய மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம்..!   - Seithipunal
Seithipunal


வருகிற 17-ந் தேதி முதல் பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள், ஏலம் விடப்படுகின்றன. அந்த ஏலத்தில் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் என அனைவரும் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். 

அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளதால் இது 4-வது முறையாக,  வருகிற 17-ந் தேதி ஏலம் தொடங்குகிறது. அதில், 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனிசிறப்புப் பெற்ற இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. இந்தமாதம் 17 -ம் தேதி தொடங்கும் இந்த ஏலம் அக்டோபர் 2-ந் தேதி முடிவடைகிறது. 

ஏலத்தில் பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இப்பொருட்களில் சாதாரண மனிதர் ஒருவர் அளித்த பரிசுப்பொருளும் இருக்கிறது. நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பரிசு பொருட்களும் உள்ளன. 

மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பரிசளித்த ராணி கமலாபாதி சிலை, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாசலபிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் பரிசளித்த திரிசூலம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் அளித்த கோல்ஹாபூர் மகாலட்சுமி கடவுள் சிலை, ஆந்திர முதலமைச்சர் அளித்த ஏழுமலையான் படம் ஆகியவையும் பரிசு பொருட்களில் அடங்கும்.

மேலும், டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் உள்ளன. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம், காசி விஸ்வநாதர் கோவிலின் மாதிரி வடிவம் உள்ளிட்டவையும் ஏலம் விடப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi's gifts aution left


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->