இறுதி ஊர்வலத்தில் தாயின் உடலை சுமந்த சென்ற பிரதமர் மோடி...!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே உள்ள ராய்சன் கிராமத்தில் தன் இளைய மகனான பங்கஜ் மோடி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறை குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா இதய ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3:39 மணிக்கு ஹீராபென் மோடி காலமானார். தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தாயார் மறைவுக்கு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனின் காலடியில் சேர்ந்தது" என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். எனது தாய் கடந்த பிறந்தநாளில் "அறிவுபூர்வமாக பணியாற்ற வேண்டும் நேர்மையாக வாழ வேண்டும் என என்னிடம் சொன்னது என்றும் நினைவில் இருக்கும், மறக்க முடியாது" என கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி தனது தாயின் கால் தொட்டு வணங்கினார். இதனைத் தொடர்ந்து அகமதாபாத் அடுத்த ராய்சன் கிராமத்தில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபெனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் தனது தாயின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi carried his mother body in the funeral procession


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->