ராஜீவ் கொலையாளிகள் போல் விடுதலை செய்ய வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் சாமியார் மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாமியார் ஷ்ரத்தானந்தா என்பவர் அவரது மனைவி ஷகீரா நமாசி என்பவரை கடந்த 1991 ஆம் ஆண்டு சொத்துக்களை அபகரிப்பதற்காக மயக்க மருந்து கொடுத்து தனது மாளிகையில் உயிருடன் புதைத்தார். இதனை அடுத்து ஷகீராவின் மகள் கொடுத்த புகாரின் பெயரில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 

இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தானந்தாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை அடுத்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஷ்ரத்தானந்தா தற்போது 80 வயதை கடந்து விட்டார். இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்குமாறு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் "எனக்கு எந்த வித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ஒரு நாள் கூட எனக்கு பரேல் வழங்கப்படவில்லை. சமீபத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அதேபோன்று மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு பரேல் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டது. கொடிய குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் என்னை மட்டும் விடுவிக்காதது சமத்துவ உரிமை மீறலாகும். எனவே எனது மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்து என்னை விடுவிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition filed in Supreme Court for acquittal like Rajiv Gandhi killers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->